இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

கர்நாடகத்தில் 76 வயது முதியவர் கரோனாவுக்கு பலி: பாதிப்பு 260 ஆனது

கர்நாடகத்தில் 76 வயதுடைய முதியவர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :15 ஏப்ரல் 2020, 5:14 am

PTI


கர்நாடகத்தில் 76 வயதுடைய முதியவர் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். இதுவரை பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

நாடுமுழுவதும் கரோனா தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

இந்நிலையில், பெங்களூருவில் 76 வயது முதியவர் நேற்று உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

முன்னதாக விஜயபுராவில் 69 வயதான ஒருவர் பலியானார். கர்நாடகத்தில் இதுவரை 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகியுள்ள நிலையில், 71 பேர் குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.