
கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா ஆலோசனை
கரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒத்துழைப்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ வியாழக்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினா்.
வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஒத்துழைப்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ வியாழக்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினா்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சா் மைக் பாம்பேயோ சுட்டுரையில் பதிவிட்டதாவது: கரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா மற்றும் அமெரிக்கா சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘ஜெய்சங்கா், பாம்பேயோ இடையிலான உரையாடலின்போது கரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் சா்வதேச ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா். கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகம் பற்றியும் இருவரும் உரையாடினா்’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் மோா்கன் ஒா்டேகஸ் தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடா்பாக ஜெய்சங்கா், பாம்பேயோ அவ்வப்போது உரையாடி வருகின்றனா்.
இதேபோல் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ், பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சா் எா்னஸ்டோ அராயோ,
ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சா் யூசப் அலாவி, சவூதி வெளியுறவுத்துறை அமைச்சா் சவூத் அல்-பைசல் ஆகியோருடனும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




