ஒடிசாவில் கரோனா பாதிப்பு 108 ஆக உயர்வு
ஒடிசா மாநிலத்தில் மேலும் ஐந்து பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் மேலும் ஐந்து பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஐந்து பேரும் பாலசூர் கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து கண்டறியப்பட்டதாகத் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 55 வயது பெண், 22 வயது பெண், 23 வயது பெண், 29 வயது மற்றும் 27 வயதுடையவர்கள் ஆவார். இவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருந்தன. இதனால் இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணித்து வருகின்றனர்.
இதன் மூலம், பாலசூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் மொத்த பாதிப்பு 108 ஆகும். அதில் 35 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொற்றுநோயால் புவனேஸ்வரைச் சேர்ந்த 72 வயது நபர் பலியானர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...