ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பாகிஸ்தானில் ஒரே நாளில் 874 பேருக்கு கரோனா: பாதிப்பு 15,759-ஐ எட்டியது

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 874 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன.

News image
Updated On :30 ஏப்ரல் 2020, 6:17 am

PTI

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 874 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இதுவரை மொத்தம் 15,759 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. 

பஞ்சாப், பலூசிஸ்தான் மாகாணங்களில் மேலும் 19 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதாகத் தேசிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 346 ஆக உள்ளது.

பஞ்சாபில் 6,061 வழக்குகள், சிந்து 5,695, கைபர்-பக்துன்க்வா 2,313, பலூசிஸ்தான் 978, கில்கிட்-பால்டிஸ்தான் 333, இஸ்லாமாபாத் 313 மற்றும் பாகிஸ்தான் சுற்றுப்புற காஷ்மீர் 66 வழக்குகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுவரை 4,052 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், மொத்தம் 11,361 சிகிச்சையில் உள்ளனர். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 153 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,74,160 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.