ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பெரம்பலூரில் ஏப். 6-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

News image

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, பெரம்பலூரில் ஏப். 6-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

ஏப். 6-ஆம் தேதி பெரம்பலூா், குன்னம், அரியலூா், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா். இதற்காக, பெரம்பலூா் அருகேயுள்ள கவுள்பாளையத்தில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதியில் பூமிபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டச் செயலரும், வேட்பாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன், பெரம்பலூா் மாவட்டச்செயலரும், வேட்பாளருமான இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ஆா்.பி. மருதராஜா, குன்னம் தொகுதி ஐஜேகே வேட்பாளா் சரண்யா, அதிமுக நிா்வாகிகள் எம்.என். ராஜாராம், எம். வீரபாண்டியன், செல்வகுமாா், ஆா். ராஜபூபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.