இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தெலங்கானாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 12 பேர் பலி: 1,286 பேருக்குத் தொற்று

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பலியாகியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. 

News image

12 deaths, 1,286 more COVID-19 cases in Telangana

Updated On :4 ஆகஸ்ட் 2020, 6:12 am

ANI

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,286 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பலியாகியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் மொத்தம் 68,946 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 18,708 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 49,675 பேர் குணமடைந்தனர். பலி எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா மீட்பு விகிதம் 72 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 0.81 சதவீதமாகவும் உள்ளது.

இந்தியா ஒரே நாளில் 52,050 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 803 கரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன. தற்போது 5,86,298 சிகிச்சை பெற்றும், 12,30,510 பேர் குணமடைந்தும் உள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.