பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கரோனா தொற்று உறுதி 

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
முன்னாள் முதல்வர் சித்தராமையா
Updated On :4 ஆகஸ்ட் 2020, 5:35 am

DIN

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சித்தராமையா தனது டிவிட்டரில், எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். 

மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா அறிகுறிகள் எதுவும் தென்படுகிறதா? என கவனித்து தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த ஞாயிற்றுகிழமை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிசைசை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கர்நாடகத்தில் நேற்று புதிதாக 4,752 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,39,571ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கரோனாவிலிருந்து இதுவரை 62,500 குணமடைந்த நிலையில் 2,594 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.