இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்: வெளியுறவுத் துறை

‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

News image

‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On :6 ஆகஸ்ட் 2020, 2:22 pm

ANI

புது தில்லி: ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகளிடையே உருவான பயணத் தடைகளின் காரணமாக, பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மற்றும் கப்பல் மூலம் மீட்பதற்காக ‘வந்தே பாரத்’ திட்டம் மே மாத துவக்கத்தில் மத்திய வெளியுறவுத் துறையினால் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தில்லியில் வியாழனன்று நடைபெற்ற வாரந்திர செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது:  

‘வந்தே பாரத்’ திட்டம் மூலமாக நாடு திரும்பியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் இதுவரை ஒன்பதரை லட்சம் இந்தியர்களை மீட்டுள்ளோம். இதன்காரணனமாக இந்தியர்களை மீட்கும் மிகப் பெரிய திட்டமாக இது நடந்து வருகிறது. நாம் இப்போது ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று துவங்கப்பட்ட ஐந்தாவது கட்டத்தில் இருக்கிறோம்.

எங்களுக்கு நமது தூதரகங்களில் இருந்து கிடைத்துள்ள கணக்கீடுகளின்படி,மேலும் 60 விமானப் பயணங்களுக்கு திட்டமிட்டுளோம். இதன்மூலம் இந்த திட்டத்தில் இந்த மாதத்தில் மேற்கொள்ள உள்ள பயணங்களின் எண்ணிக்கை 746 ஆக உயர்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.