தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை உயர்த்தியது ஆர்பிஐ

ரிசர்வ் வங்கி தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை உயர்த்தி அறிவித்திருப்பதன் மூலம் இனி தங்க நகைக்கு கூடுதல் தொகையை கடனாகப் பெற வழிவகைக் காணப்பட்டுள்ளது.

News image
ஆர்பிஐ அறிவிப்பால் தங்க நகைக்கு அதிகத் தொகையை கடனாகப் பெறலாம்
Updated On :6 ஆகஸ்ட் 2020, 2:44 pm

DIN


மும்பை: ரிசர்வ் வங்கி தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை உயர்த்தி அறிவித்திருப்பதன் மூலம் இனி தங்க நகைக்கு கூடுதல் தொகையை கடனாகப் பெற வழிவகைக் காணப்பட்டுள்ளது.

அதாவது, வேளாண் துறை சாராத பயன்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட தங்கத்துக்கு நிகரான கடன் தொகையை 75% ல் இருந்து 90% ஆக உயர்த்தியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை பொது மக்களும், தொழில்முனைவோரும் எதிர்கொள்ள வசதியாக, வேளாண் துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கு கடன் பெறுவோருக்கான தங்கத்துக்கு நிகரான கடன் மதிப்பை 75%ல் இருந்து 90% ஆக உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வு 2021ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்றும், இது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேளாண் துறை அல்லாத பிற பயன்பாட்டுக்கு, ஒரு தங்க நகை மற்றும் தங்க ஆபரணங்களின் மதிப்பில் 75% மிகாமல் கடன் வழங்க வேண்டும் என்பதே ஆர்பிஐயின் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லாமல் நிர்ணயித்து அறிவித்த ஆர்பிஐ, கரோனா பேரிடர் காரணமாக பொருளாதாரம் மிகமோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.