தெலங்கானாவில் புதிதாக 2,207 பேருக்கு கரோனா: 12 பேர் பலி
தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,207 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்தனர்.


ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,207 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்தனர். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,275-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா பாதிப்பு இதுவரை 75,275-ஆக அதிகரித்துள்ளது. இதில் 21,417 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கரோனாவிற்கு 601 பேர் உயிரிழந்த நிலையில், 53,239 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23,495 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இறப்பு விகிதம் 0.79 விழுக்காடாக மட்டுமே உள்ள நிலையில், குணமடைவோரின் விகிதம் 70.7 விழுக்காடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...