எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் 3,646 பேருக்கு கரோனா

பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,646 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,794-ஆக அதிகரித்துள்ளது.

News image
பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் 3,646 பேருக்கு கரோனா
Updated On :7 ஆகஸ்ட் 2020, 1:01 pm

DIN

பாட்னா: பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,646 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,794-ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக பிகார் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டு 25,128 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 400 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், 46,265 பேர் குணமடைந்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று (வெள்ளிக் கிழமை) இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து, ஒரே நாளில் 62,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,07,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,78,106 பேர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.