எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இந்திய ஹாக்கி அணித் தலைவர் உள்ளிட்ட ஐவருக்கு கரோனா பாதிப்பு

இந்திய ஹாக்கி அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட ஐந்து இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
இந்திய ஹாக்கி அணித் தலைவர் உள்ளிட்ட ஐவருக்கு கரோனா பாதிப்பு
Updated On :8 ஆகஸ்ட் 2020, 6:19 am

DIN

இந்திய ஹாக்கி அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட ஐந்து இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய ஹாக்கி விளையாட்டு அணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களான மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார் மற்றும் கிருஷ்ணன் பி பகத் ஆகியோருக்கு பெங்களூரில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்[பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வீரர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து பயிற்சிக்காக பெங்களூரு வந்த போது தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.