தேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி துவக்கிவைப்பு

​தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.
​தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.
​தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.


தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி சமாதியில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இதைத் தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி அங்கு தூய்மை இந்தியா திட்டம் குறித்த விடியோ ஒன்றையும் பார்வையிட்டார்.

இதன்பிறகு மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி பேசியதாவது:

"நாம் அனைவரும் தற்போது அசுத்தமே வெளியேறு என்ற பிரசாரத்தின் அங்கம். கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கு உள்ள குழந்தைகள் உள்பட அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மகாத்மா காந்தியின் மதிப்பீடுகளையும், கொள்கைகளையும் ஏற்க ஒட்டுமொத்த நாடும் முன்வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் லட்சக்கணக்கானோர் காந்தியால் ஈர்க்கப்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தை தங்களது வாழ்வின் லட்சியமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன்காரணமாகத்தான் வெறும் 60 மாதங்களில் 60 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த முடிந்தது.

2014-க்கு முன்பு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், என்னவாகியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 60 சதவிகித மக்கள் திறந்தவெளி கழிப்பறையைப் பயன்படுத்தி வந்தபோது, பொது முடக்கத்தை அமல்படுத்தியிருக்க முடியுமா?" என்றார் பிரதமர் மோடி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com