கர்நாடகத்தில் வெள்ளத்தால் 4000 கோடி இழப்பு
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையில் 3500 முதல் 4000 கோடி மதிப்பிலான சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கூறினார்.

கோப்புப் படம்

கோப்புப் படம்
கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையில் 3500 முதல் 4000 கோடி மதிப்பிலான சொத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா கூறினார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொளி சந்திப்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதால் மாநில முதல்வர் எடியூரப்பா பங்கேற்க முடியவில்லை. மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் அசோகா ஆகியோர் காணொளி சந்திப்பில் பங்கேற்கின்றனர்.
பிரதமருடானான சந்திப்பிற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கூறுகையில்,
வாருவாய்த்துறை அதிகாரிகளின் மதிப்பீடுகளின்படி, இதுவரை 3,500 முதல் 4,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுருக்கலாம். இது இறுதியானது அல்ல.
இதுவரை சுமார் 80,000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இன்னும் அதிக அளவிலான சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும். முதற்கட்டமாக மத்திய அரசிடம் இந்த இழப்புகளுக்கான நிவாரண தொகையை கேட்கவுள்ளோம்.
எதிர்வரும் நாள்களில் விரிவாக கணக்கிடப்பட்டு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளோம்.
மல்நாட், கடலோர மற்றும் மத்திய கர்நாடகாவின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...