வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பில்லை: மத்திய உயர்கல்வித் துறை செயலாளர்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

News image
டிசம்பர் வரை பள்ளிகள் திறப்பில்லை: மத்திய உயர்கல்வித் துறை செயலாளர்
Updated On :11 ஆகஸ்ட் 2020, 7:09 am

DIN

புது தில்லி: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று மனிதவள மேம்பாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பள்ளிகள் திறப்பு குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பில்லை என்றும், ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பள்ளி வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் காரே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும், கல்லூரி வகுப்புகள் தொடங்குவது தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.