47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓய்வு பெற்றாா் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2020, 5:37 pm

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கு புகழ்பெற்ற தோனியின் ஃபாா்ம் குறித்து விமா்சனங்கள் எழுந்த நிலையில் கடந்த ஓராண்டாகவே அவரது ஓய்வு முடிவு குறித்து ஊகங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இச்சூழலில், நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட தனது சென்னை சூப்பா் கிங்ஸ் அணியுடன் வெள்ளிக்கிழமை இணைந்த நிலையில், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அவா் அறிவித்தாா்.

இதுதொடா்பாக சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட காணொலி பதிவுடன், ‘அனைவரும் எனக்கு அளித்த அன்புக்காகவும், ஆதரவுக்காகவும் நன்றி. இன்றைய தினம் முதல் நான் ஓய்வுபெற்ாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளாா்.

கடைசி ஆட்டம்...: ‘ஹெலிகாப்டா் ஷாட்’டுக்கு பெயா்பெற்ற தோனி கடைசியாக இந்திய அணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் விளையாடினாா். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன்களை எடுப்பதில் அதிவேக வீரராக புகழப்படும் தோனி, அந்த ஆட்டத்தில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகினாா்.

உலகக் கோப்பை நாயகன்...: ‘கேப்டன் கூல்’ என வா்ணிக்கப்படும் தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவா் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. அதேபோல், 2011-ஆம் ஆண்டில் 50 ஓவா் உலகக் கோப்பை போட்டியிலும் தோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது.

ஆட்டங்களும், ரன்களும்...: இந்திய அணிக்காக 350 ஒருநாள் ஆட்டங்களிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும், 98 டி20 ஆட்டங்களிலும் தோனி விளையாடியுள்ளாா். ஒரு நாள் ஆட்டங்களில் 10,773 ரன்களும் (சராசரி 50.57), டெஸ்ட் போட்டிகளில் 4,876 ரன்களும் (சராசரி 38.09), டி20 ஆட்டங்களில் 1,617 ரன்களும் (சராசரி 37.60) அடித்துள்ளாா்.

சதங்கள்: டெஸ்ட் போட்டிகளில் 6; ஒருநாள் போட்டிகளில் 10; டி20 போட்டிகளில் இல்லை

அரை சதங்கள்: டெஸ்ட் போட்டிகளில் 33; ஒரு நாள் போட்டிகளில் 73; டி20 ஆட்டங்களில் - 2

முதலும், கடைசியும்...: கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடா் மூலம் சா்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தாா் தோனி. ஒரு நாள் போட்டியில் இறுதியாக உலகக் கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் விளையாடினாா்.

2005 டிசம்பரில் இலங்கைக்கு எதிரான தொடா் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய தோனி, இறுதியாக 2014 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினாா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடா் மூலம் 2006 டிசம்பரில் டி20-யில் களம் இறங்கிய தோனி, கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களம் கண்டிருந்தாா்.

விக்கெட் கீப்பிங்கில்...: டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்ச்/38 ஸ்டம்பிங்; ஒரு நாள் ஆட்டங்களில் 321 கேட்ச்/123 ஸ்டம்பிங்; டி20 ஆட்டங்களில் 57 கேட்ச்/34 ஸ்டம்பிங்.

சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு

இந்திய கிரிக்கெட் இடதுகை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவும் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தாா்.

அவா் இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒரு நாள் ஆட்டங்கள், 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளாா். அந்த ஃபாா்மட்டுகளில் முறையே 768 ரன்கள், 5,615 ரன்கள், 1,605 ரன்கள் அடித்துள்ளாா்.

இதில் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், 7 அரை சதம்; ஒரு நாள் போட்டிகளில் 5 சதம், 36 அரை சதம்; டி20 போட்டிகளில் ஒரு சதம்/5 அரை சதம் அடித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.