2024 மக்களவைத் தேர்தலில் எம்.எஸ்.தோனி போட்டியிட வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.


கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,
எம்.எஸ். தோனி கிரிக்கெட்டில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார். அனைத்திலும் அல்ல. அவரது திறமையால் எத்தகைய நிலையையும் எதிர்த்து போராட முடியும். அணியை வழிநடத்தியதுபோன்று பொது வாழ்க்கையிலும் அவர் ஈடுபட வேண்டும். 2024-ல் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...