மாபெரும் இசைக் கலைஞரான ஹிந்துஸ்தானி பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 90. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவருடைய மகள் துர்கா ஜஸ்ராஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலுள்ள நியு ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த ஜஸ்ராஜ்.
சங்கீத மார்த்தாண்ட பண்டிட் ஜஸ்ராஜ், நியு ஜெர்ஸியிலுள்ள அவருடைய இல்லத்தில் அமெரிக்க நேரப்படி காலை 5.15 மணிக்கு மாரடைப்பு காரணமாக மறைந்தார் என்று அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஹரியாணா மாநிலத்தில் பிறந்தவரான பண்டிட் ஜஸ்ராஜ், பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என நாட்டின் மிக உயரிய விருதுகளைப் பெற்றவர்.
எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்தவர் ஜஸ்ராஜ். ஏராளமான கச்சேரிகளை உலகெங்கும் நிகழ்த்தியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணற்ற ஆல்பங்களாக வெளிவந்துள்ளன.
இந்தியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இசையும் கற்றுக் கொடுத்தார்.
ஜஸ்ராஜின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட தலைவர்களும் எண்ணற்ற கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


