மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மன்னிப்புக் கேட்க மாட்டேன்: பிரசாந்த் பூஷண்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்கத் தயார் என்றும், கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

News image
மன்னிப்பு கேட்க மாட்டேன்: பிரசாந்த் பூஷண்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 11:57 am

PTI

புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்கத் தயார் என்றும், கருத்துக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளின் செயல்பாட்டை சுட்டுரையில் விமரிசித்திருந்த பிரசாந்த் பூஷன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிடுகிறது.

தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று கூடியது. அப்போது, தண்டனை விவரங்கள் குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இறுதியாக, பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன. 

அதில், எனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக இருக்கிறேன். நீதிபதிகள் குறித்து சுட்டுரையில் பதிவிட்ட இரண்டு பதிவுகளுக்காகவும் நான் மன்னிப்புக் கேட்க மாட்டேன், எனது கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன்.  நான் எனது அடிப்படை கடமையை செய்ததாகவேக் கருதுகிறேன். நான் செய்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் கருதுமானால், அதற்காக எனக்கு அளிக்கும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன் என்று பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.