வேறு அமர்வில் விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றத்தில் பூஷண் மனு தள்ளுபடி
மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணின் மறுஆய்வு மனு விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை வேறு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிடுகிறது.
இன்று தண்டனை விவரங்களை அறிவிக்க உச்ச நீதிமன்ற அமர்வு கூடியபோது, தண்டனை விவரங்களை வேறு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. மன்னிப்புக் கேட்க மாட்டேன்: பிரசாந்த் பூஷண்
உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, பிரசாந்த் பூஷணின் கோரிக்கையை நிராகரித்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்குப் பிறகே, இந்த வழக்கில் அளிக்கப்படும் தண்டனை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
மேலும், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் பி.ஆர். காவி, கிருஷ்ண முராரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விவரத்தை வேறொரு அமர்வு விசாரிக்க வேண்டும் என்று, பிரசாந்த் பூஷண் தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் துஷ்யந்த் தாவேவின் கோரிக்கை, "முறையற்ற செயல்" என்றும் கருத்துக் கூறியுள்ளனர்.
இதையும் படிக்கலாமே.. மன்னிப்புக் கேட்க மறுத்ததை பரிசீலிக்க பூஷணுக்கு அவகாசம்: உச்ச நீதிமன்றம்
இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்யும் வரை, அதற்கான தண்டனை விவரங்களை வெளியிடக்கூடாது என்று கோரி வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...