கரோனா தடுப்பு மருந்து: ரஷியாவுடன் ஐரோப்பா பேச்சுவார்த்தை
ரஷியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து குறித்து கூடுதல் தகவல்களை பெற ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஐரோப்பா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஷியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து குறித்து கூடுதல் தகவல்களை பெற ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஐரோப்பா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிந்து அதன் பரிசோதனைக்கு ரஷிய அரசு அனுமதி பெற்றுள்ளது.
இதனிடையே விஞ்ஞான ரீதியில் அனுமதி பெறுவதற்காக மேம்பட்ட பரிசோதனைகளை கரோனா தடுப்பு மருந்து இன்னும் மேற்கொள்ளவில்லை. கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாக கூறப்பட்டாலும் இன்னும் நிரூபனம் செய்யப்படவில்லை.
இதனிடையே புதிதாக கண்டறியப்பட்டுள்ள கரோனா தடுப்பு மருந்து குறித்து கூடுதல் தகவல்களை பெற ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஐரோப்பா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய உலக சுதாகார மையத்தின் அவசர சிகிச்சை பிரிவு அதிகாரியான கேத்ரின், ரஷியா மற்றும் உலக சுகாதார அமைப்புடன் கரோனா தடுப்பு மருந்தின் பல்வேறு பட்ட செயல்முறைகள் மற்றும் தகவல்கள் குறித்து நேரடியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
உலக சுகாதார மையத்தின் ஐரோப்பா இயக்குனர், ஹன்ஸ் க்ளுக் பேசியதாவது, தடுப்பூசி வளர்ச்சியில் அனைத்து முன்னேற்றங்களையும் வரவேற்பதாகவும், எனினும் அனைத்து தடுப்பு மருந்துகளும் ஒரே மாதிரியான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ரஷிய தடுப்பு மருந்து ஒருசிலருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள முடிவுகள் குறித்து ஆராய மட்டுமே நாங்கள் இதனை மேற்கொள்ளவில்லை. தடுப்பூசி எவ்வாறு கண்டறிவது மற்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசி வழிமுறைகள் குறித்து ஆராய நேரத்தை செலவிட இருக்கிறோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...