உத்தரப்பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் குற்றங்கள்
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கெரி மாவட்டம் லக்கிம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் அருகிலுள்ள ஊரில் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க திங்கள்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத சிறுமி செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் கூர்மையான ஆயுதத்தால் சிறுமி தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்படுவது கடந்த 10 நாள்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த சுதந்திர தினத்தன்று இதே மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசில் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...