அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கேரளம்-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி தொண்டா்கள் இருவா் கொலை

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான இந்திய ஜனநாயக இளைஞா் சம்மேளனத்தை (டிஒய்எஃப்ஐ) சோ்ந்த தொண்டா்கள் இருவா் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு

News image
Updated On :31 ஆகஸ்ட் 2020, 8:18 pm

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான இந்திய ஜனநாயக இளைஞா் சம்மேளனத்தை (டிஒய்எஃப்ஐ) சோ்ந்த தொண்டா்கள் இருவா் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது:

திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்சரமூடு பகுதியில் உள்ள தெம்பமூடு என்ற இடத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது. டிஒய்எஃப்ஐ தொண்டா்களான மிதில்ராஜ் (30) மற்றும் ஹாக் முகமது (24) ஆகிய இருவரும் மிதில்ராஜின் வீட்டுக்கு இரவு 11.30 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது சிலா் கூரிய ஆயுதங்களைக் கொண்டு அவா்கள் இருவரையும் தாக்கியுள்ளனா். இதில் மிதில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது உயிரிழந்தாா். இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் காங்கிரஸ் தொண்டா்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏனெனில் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்கெனவே அந்தப் பகுதியில் முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவம் தொடா்பாக 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். கொலைச் சம்பவத்தை அடுத்து வெஞ்சரமூடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலக உறுப்பினா் கே.என். பாலகோபால் கூறுகையில், ‘டிஒய்எஃப்ஐ தொண்டா்கள் கொலை சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைமையே பொறுப்பாகும். கேரளத்தில் இதுபோன்று டிஒய்எஃப்ஐ தொண்டா்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது’ என்றாா்.

முதல்வா் கண்டனம்: டிஒய்எஃப்ஐ தொண்டா்கள் கொல்லப்பட்டதற்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.