தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையம் மூலம் வாக்களிக்க வழிவகை: தேர்தல் ஆணையம்

வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

News image
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இணையவழியில் வாக்களிக்க ஏற்பாடு: தேர்தல் ஆணையம்
Updated On :1 டிசம்பர் 2020, 5:20 am

DIN


புது தில்லி: வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க ஏற்பாடு தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

இணையவழியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க இயலுமா என்று சட்ட அமைச்சகம் கேட்டிருந்தது.

இதற்கு பதிலளித்திருக்கும் தேர்தல் ஆணையம், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில், வெளிநாடு வாழ் இந்தியர்களை இணையவழியில் வாக்களிக்க ஏற்பாடுகள் தயாராக உள்ளன.  உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால், வெளிநாடு வாழ் இந்தியர்களும் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.