மகாராஷ்டிரத்தில் புதிதாக 5,600 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
புதிதாக 5,600 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,32,176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,027 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,95,208 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 111 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 47,357 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் இன்னும் 88,537 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,700 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,371 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, 18 பேர் மட்டும் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை: 16 தொகுதிகளில் 419 வேட்பாளா்கள் - விஜய் களமிறங்கும் பெரம்பூரில் 47 போ்

வன்னியா்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு திமுக அரசே காரணம் - அன்புமணி ராமதாஸ்

ஏற்காடு தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


