உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆந்திரத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

ஆந்திரப் பிரதேசத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :2 டிசம்பர் 2020, 4:43 pm


ஆந்திரப் பிரதேசத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

ஆந்திர சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, புதிதாக 663 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,412 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,55,485 பேர் நோயத் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 7 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 7,003 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 6,924 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.