அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஜூலை 23-க்குப் பின்.. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 4.28 லட்சமாகக் குறைவு

கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 132 நாள்களுக்குப்பின் 4.28 லட்சமாக குறைந்துள்ளது.

News image
ஜூலை 23-க்குப் பின்.. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 4.28 லட்சமாகக் குறைவு
Updated On :2 டிசம்பர் 2020, 7:42 am

DIN


புது தில்லி: கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 132 நாள்களுக்குப்பின் 4.28 லட்சமாக குறைந்துள்ளது.

நாட்டில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 4.28 லட்சமாக (4,28,644) குறைந்துள்ளது. 132 நாள்களுக்குப்பின் இது மிகக் குறைந்த அளவு. இதற்கு முன் கடந்த ஜூலை 23ம் தேதி சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 4,26,167 ஆக இருந்தது. 

நாள்தோறும் புதிதாக தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை, கடந்த 3 நாள்களாக சுமார் 30 ஆயிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 43,062 பேர் குணமடைந்துள்ளனர். 

நாள்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, ஒரே நாளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையைவிட கடந்த 5 நாள்களாக அதிகரித்து வருகிறது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 89,32,647-ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 94.03 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.