தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர்

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனக்களித்த பத்ம விபூஷண் விருதை பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்க் பாதல் திருப்பியளித்துள்ளார். 

News image
Updated On :3 டிசம்பர் 2020, 2:28 pm

DIN

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனக்களித்த பத்ம விபூஷண் விருதை பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்க் பாதல் திருப்பியளித்துள்ளார். 
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் தில்லியில் தொடர்ந்து 8ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனா். 
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
இருப்பினும், விவசாயிகளின் போராட்டத்துக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனக்களித்த பத்ம விபூஷண் விருதை பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங்க் பாதல் திருப்பியளித்துள்ளார். இவர் பஞ்சாப் மாநில முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க. உடனான கூட்டணியை சிரோமணி அகாலிதளம் கட்சி முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.