சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கரோனா தடுப்பூசி: தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்

கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
பிரதமர் மோடி
Updated On :4 டிசம்பர் 2020, 6:08 am

DIN

கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனாவுக்கு மருந்து கண்டறியும் ஆய்வுகளை பல நாடுகள் முன்னெடுத்துள்ளன. 

இந்தியாவில்  ஜைகோவ்-டி, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 3 மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக கரோனா தடுப்பூசி குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.