முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு: ஒருநாள் உண்ணாவிரதத்தில் அண்ணா ஹசாரே
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஆதரவு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 13 நாள்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமூக ஆர்வலரான அண்ணா ஹசாரே முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர் தொடங்கினார்.
மேலும் விவசாயிகளின் நலன்களுக்காக செயல்பட அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் போராட்டம் பரவ வேண்டும் என்றும் ஹசாரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...