பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘போராடும் விவசாயிகள் முட்டாள்களா?’: மத்திய அரசுக்கு கமல்நாத் கண்டனம்

மத்திய அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகள் இன்னலில் உள்ளதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான கமல்நாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

News image
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்
Updated On :8 டிசம்பர் 2020, 12:50 pm

DIN

மத்திய அரசின் நடவடிக்கைகளால் விவசாயிகள் இன்னலில் உள்ளதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான கமல்நாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 13 நாள்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் இன்னல்களில் உள்ளதாகத் தெரிவித்த கமல்நாத், “போராடும் விவசாயிகள் முட்டாள்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது விவசாயிகளுக்கு அனைத்து தகவல்களும் தெரிந்திருக்கிறது” எனக் கமல்நாத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.