பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘விவசாயிகளுடன் நிற்க வேண்டியது நமது கடமை’: சிவசேனை எம்.பி. கருத்து

நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை என சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.

News image
சஞ்சய் ரௌத் எம்.பி
Updated On :8 டிசம்பர் 2020, 6:48 am

DIN

நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை என சிவசேனை நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த 13 நாள்களாக போராடி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைகளில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதுமான முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய சிவசேனை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரெளத், “அரசுக்கு இதயம் என ஒன்று இருந்தால் அது உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, அவர்களே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர்” எனத் தெரிவித்தார்.

மேலும், “இது அரசியலுக்கான முழு அடைப்பு இல்லை. இது எங்கள் உணர்வு. தில்லியில் போராடும் விவசாயிகள் எந்தவொரு அரசியல் கொடியையும் பிடித்து நிற்கவில்லை. விவசாயிகளுடன் ஒற்றுமையுடன் நிற்பது மற்றும் அவர்களின் உணர்வுகளுடன் இணைந்திருப்பது எங்கள் கடமை. இங்கே அரசியல் இல்லை. இருக்கவும் கூடாது” என சஞ்சய் ரெளத் வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.