11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

இந்தியாவில் ஒரே நாளில் 30,254 பேருக்கு கரோனா; 391 போ் பலி

நாடு முழுவதும் மேலும் 30,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 டிசம்பர் 2020, 4:36 am

நாடு முழுவதும் மேலும் 30,254 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 30,254 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,57,029-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 391 போ் உயிரிழந்தனா். 

இதனால் மொத்த உயிரிழப்பு  1,43,019-ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றில் இருந்து மேலும் 33,136 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 93,57,464-ஆக அதிகரித்தது. நாட்டில் தற்போது  3,56,546  போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 6-ஆவது நாளாக சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 12-ஆம் தேதி வரை 15,37,11,833 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், நேற்று மட்டும் 10,14,434 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.