சத்தீஸ்கரில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.


சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
புதன்கிழமை ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படை, மாவட்ட ரிசர்வ் படை இணைந்து புதன்கிழமை நக்சல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மிலியாம்பள்ளி - ராஜ்பெண்டா கிராமப் பகுதியில் நக்சலைட் இயக்கத்தினர் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
மேலும் அப்பகுதியில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...