/

விவசாய போராட்ட விவாதத்தைத் தவிர்க்கவே குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: சஞ்சய் ரெளத்

விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதத்தை தவிர்ப்பதற்காகவே குளிர்கால  கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் (கோப்புக்காட்சி)
Updated On :20 டிசம்பர் 2020, 8:27 am

DIN

விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதத்தை தவிர்ப்பதற்காகவே குளிர்கால  கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திருமப் பெற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்த விவாதத்தை தவிர்க்கும் வகையில், கரோனாவை காரணம் காட்டி குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்ததன் மூலம், தில்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதத்தை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று சஞ்சய் ரெளத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.