தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி: தேசியவாத காங்கிரஸ்

மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :21 டிசம்பர் 2020, 2:47 pm

DIN


மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த நவாப் மாலிக் தெரிவித்ததாவது:

"மேற்கு வங்க அரசைக் கவிழ்க்க பாஜக மத்திய அரசைப் பயன்படுத்துகிறது. இது மிகவும் தீவிரமானது. மேற்கு வங்க அரசின் ஒப்புதல் இல்லாமல் ஐபிஎஸ் அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுள்ளது மிகவும் அபாயகரமானது. இதுபற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அழைத்துப் பேசி ஆலோசனை நடத்தினார். மாநில அரசுகளை கவிழ்க்கும் பாஜகவின் திட்டம் சரியானது அல்ல என்றும் ஜனநாயகத்துக்குள்பட்டதல்ல என்றும் பவார் தெரிவித்தார். 

சரத் பவார் மற்றும் மற்ற தலைவர்கள் எதிர்காலத்தில் ஒன்றிணையலாம். தேவைப்பட்டால், சரத் பவாரும் கொல்கத்தா செல்வார்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.