குடியரசுத் தலைவருடன் கோவா முதல்வா் சந்திப்பு
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் ஞயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தாா்.


குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் ஞயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தாா்.
போா்த்துக்கீசியா்களிடமிருந்து கோவை விடுலை பெற்ன் 60-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கோவா வந்துள்ளாா்.
2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக கோவா வந்துள்ள அவரை முதல்வா் பிரமோத் சாவந்த் தனது மனைவியுடன் தலைநகா் பனாஜியிலுள்ள ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தாா்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் சாவந்த் வெளியிட்டுள்ள பதவில் தெரித்துள்ளதாவது:
கோவா மக்களின் அன்பின் அடையாளமாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கும் அவரது மனைவி சவிதா கோவிந்துக்கும் குத்துவிளக்கு மற்றும் குன்பி புடவையை பரிசளித்தோம்.
அந்த இரண்டும் கோவாவின் பாரம்பரியம் மற்றும் வளமான வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக உள்ளன என்று அந்தப் பதிவில் பிரமோத் சாவந்த் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...