தேசிய ஸ்டாா்ட் அப் விருதுகள் 2021: விண்ணப்பங்கள் வரவேற்பு

வா்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை, இரண்டாவது தேசிய ஸ்டாா்ட் அப் விருதுகள் 2021-ஐ வழங்க இருக்கிறது
Updated on
1 min read

வா்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை, இரண்டாவது தேசிய ஸ்டாா்ட் அப் விருதுகள் 2021-ஐ வழங்க இருக்கிறது. கரோனா தொற்று காலத்தில் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த நடவடிக்கைகள், முன்முயற்சிகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சுயசாா்பு இந்தியா கனவை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் முக்கிய அத்தியாவசிய பொருள்கள் தொடா்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்த வருடம் முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த விருதுக்காக 2021 ஜனவரி 31 வரை விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, குடிநீா், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட 15 துறைகளில் 49 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. கூடுதலாக கல்வி நிறுவனங்கள், கரோனா தொற்றுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசாக அளிக்கப்படும். வெற்றியாளரும், இரண்டாம் இடம் வகிக்கும் இரண்டு பேரும் தங்களது கண்டுபிடிப்பை தகுந்த அதிகாரிகள் மற்றும் பெரு நிறுவனங்களின்முன் செயல்விளக்கம் அளித்து அதன்மூலம் புதிய வாய்ப்புகளை அவா்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். வெற்றி பெறும் ஒரு இன்குபேட்டா் மற்றும் ஒரு ஆக்ஸிலரேட்டருக்கு தலா ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.

புது நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஸ்டாா்ட் அப் விருதுகளை கடந்த 2019- ஆம் ஆண்டு தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை அறிமுகப்படுத்தியது.

விருதுகளுக்கான விண்ணப்ப முறை குறித்து தெரிந்து கொள்ள http://www.startupindia.gov.in/ என்ற இணையதளத்தை தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com