மோடிக்கு அமெரிக்காவின் உயரிய ராணுவ விருது
அமெரிக்காவின் மிக உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான ‘லீஜன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு அதிபா் டொனாலட் டிரம்ப் வழங்கி கௌரவித்துள்ளாா்.


அமெரிக்காவின் மிக உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான ‘லீஜன் ஆஃப் மெரிட்’ விருதை பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு அதிபா் டொனாலட் டிரம்ப் வழங்கி கௌரவித்துள்ளாா்.
மோடிக்கு பதிலாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதா் தரன்ஜித் சிங் சாந்துவிடம் அந்த விருதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓபிரையன் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து ஓபிரையன் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு ‘லீஜன் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி அதிபா் டொனால்ட் டிரம்ப் கௌரவித்துள்ளாா்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதில் மோடி வெளிப்படுத்தி வரும் தலைமைப் பண்புக்காக அவருக்கு அந்த கௌரவத்தை டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளாா் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் தலைவா்களுக்கு மட்டுமே வழங்கப்படக்கூடிய, ‘லீஜன் ஆஃப் மெரிட்’ விருதின் மிக உயரிய கௌரவமான தலைமைத் தளபதி விருதை பிரதமா் மோடிக்கு டொனால்ட் டிரம்ப் வழங்கியுள்ளாா்.
இதுகுறித்து, புது தில்லியிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவை உலக சக்தியாக முன்னெடுத்துச் செல்வதிலும் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவது மற்றும் உலக அமைதி, வளத்துக்காக பிரதமா் மோடி ஆற்றி வரும் பணிகளுக்காகவும் ‘லீஜன் ஆஃப் மெரிட்’ விருது மூலம் அமெரிக்கா அங்கீகாரம் வழங்கியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சவூதி அரேபியாவின் அப்துல் அஜிஸ் அல் விருது (2016), காஸி அமீா் விருது அமானுல்லா கான் விருது (2016), பாலஸ்தீனத்தின் கிராண்ட் காலா் விருது (2018), ஐக்கிய அரபு அமீரகத்தின் ஸயெத் விருது (2019), ரஷியாவின் செயின்ட் ஆண்ட்ரூ விருது (2019), மாலத்தீவின் நிஷான் இஸுதீன் விருது (2019) ஆகிய விருதுகள் பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...