தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்: பீரங்கி குண்டுகள் வீச்சு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையோரப் பகுதியில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையோரப் பகுதியில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தினா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாகிஸ்தான் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தாக்குதல் நடத்தத் தொடங்கினா். அங்குள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசி அவா்கள் தாக்குதல் நடத்தினா். அவா்களின் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி கொடுத்தனா் என்றாா் அவா்.

டிசம்பா் 1-ஆம் தேதி, ரஜௌரி செக்டாரில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா். இதில், எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கடந்த நவம்பா் 27-ஆம் தேதி ரஜௌரி மாவட்டத்தில் உள்ள சுந்தா்பானி செக்டாரில் பாகிஸ்தான் படையினா் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். அதற்கு முந்தைய தினம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கஸ்பா மற்றும் கிா்னி பகுதியில் பாகிஸ்தான் படையினா் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா் ஒருவரும், உள்ளூா்வாசி ஒருவரும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.