டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், தீவிர சீர்திருத்தவாதியாக நாட்டின் வரலாற்றில் எப்போதும் நினைவு கூரப்படுவார் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 11:00 pm

DIN


ஹைதராபாத்: முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், தீவிர சீர்திருத்தவாதியாக நாட்டின் வரலாற்றில் எப்போதும் நினைவு கூரப்படுவார் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
பி.வி.நரசிம்ம ராவின் 16ஆவது நினைவு தினத்தை ஒட்டி, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கல்வி, பொருளாதாரம், நிலம், நிர்வாகம் மற்றும் இதர துறைகளில் பி.வி.நரசிம்ம ராவ் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவின் காரணமாக நாடு சிறந்த நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகள், ராஜதந்திரம் ஆகியவற்றில் அவரது உறுதியான நடவடிக்கைகள் நாட்டின் ஒற்றுமை, புனிதம், இறையாண்மையை வலுப்படுத்தியது.
பன்மொழிப் புலமை, பன்முகத்தன்மை, சிறந்த ஆட்சியாளரான பி.வி.நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பி.வி.நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் மிகுந்த பொறுப்புணர்வுடனும், மரியாதையுடனும் எனது அரசு கொண்டாடியது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே  பி.வி.நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தெலங்கானா சட்ட மேலவைத் தலைவர் குட்டா சுஹேந்தர் ரெட்டி, சட்டப் பேரவைத் தலைவர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி, முதல்வரின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா மற்றும் பலர் கலந்துகொண்டு பி.வி.நரசிம்ம ராவின் பங்களிப்புகளை நினைவு
கூர்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.