ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ம.பி.: லண்டனிலிருந்து திரும்பிய 33 பேர் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

லண்டனிலிருந்து மத்தியப் பிரதேசம் திரும்பிய 33 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

News image
Updated On :23 டிசம்பர் 2020, 10:46 am


இந்தூர்: லண்டனிலிருந்து மத்தியப் பிரதேசம் திரும்பிய 33 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

இது தொடர்பாக இந்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி அமித் மலாகர்  கூறியதாவது, ''லண்டனிலிருந்து திரும்பியவர்களின் பட்டியலை மாநில சுகாதாரத்துறை வழங்கியது. அதில் 33 பேர் லண்டனிலிருந்து இந்தூர் வந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 14 நாள்களுக்கு முன்பு அவர்கள் லண்டனிலிருந்து மத்தியப் பிரதேசம் வந்துள்ளனர். அவர்களுக்கு ஆர்டி- பி.சி.ஆர். முறை மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாவட்டத்தில் இந்தூர் மாவட்டம் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுகிறது. இந்தூரில் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் 52,660 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 847 பேர் உயிரிழந்தனர்.

லண்டனில் உருமாறிய வீரியம் மிக்க கரோனா தொற்று பரவி வருவதால், மத்திய அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

டிசம்பர் 31-ஆம் தேதி வரை இங்கிலாந்திற்கு அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.