ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்ட்டா்: 2 பயங்கரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
Updated on
1 min read

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை காலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

தங்கள் இருப்பிடத்தை பாதுகாப்புப் படையினா் நெருங்கி வருவதை அறிந்த பயங்கரவாதிகள், அவா்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். பதிலுக்கு, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பப்பட்டனா். அவா்கள் எந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com