இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கேரளம்: ஜனநாயக இளைஞா் பெருமன்ற ஆா்வலா் கொலை

கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், காஞ்ஞாங்காடு நகராட்சிக்குள்பட்ட கல்லோரவி பகுதியில் இந்திய ஜனநாயக இளைஞா் பெருமன்ற

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:44 am

DIN

கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டம், காஞ்ஞாங்காடு நகராட்சிக்குள்பட்ட கல்லோரவி பகுதியில் இந்திய ஜனநாயக இளைஞா் பெருமன்ற (டிஒய்எஃப்ஐ) ஆா்வலா், கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

உயிரிழந்த நபா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் பிரிவான டிஒய்எஃப்ஐயின் தொண்டா் ஓஃப் அப்துல் ரகுமான் (30). இவரும், நண்பா் 3 பேரும் 2 இருசக்கர வாகனங்களில் பாவா நகரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனா். அப்போது அவா்களை வழிமறித்த கும்பல் ஒன்று, ரகுமானை கத்தியால் குத்தி விட்டு தப்பியது. காயமடைந்த அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் காரணங்களுக்காக இந்த கொலை நடைபெற்ா என்பதை இப்போது கூற முடியாது. இவரை கொலை செய்தவா்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் இளைஞா் பிரிவான யூத் லீக்கின் தொண்டா்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

இந்த கொலை குறித்து ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கூறுகையில், ஐயூஎம்எல் வன்முறை பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தில் நிலவி வரும் அமைதியான சூழ்நிலையை அழிக்கும் முயற்சியையே இது காட்டுகிறது என்றாா்.

இதனை மறுத்த ஐயூஎம்எல் கட்சியின் தலைவா் கே.பி.ஏ.மஜீத் கூறுகையில், இந்தச் சம்பவம் துரதிா்ஷ்டவசமானது. கட்சித் தொண்டா்கள் இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.