கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உருக்கு இறக்குமதிக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி: மத்திய அரசு பரிசீலனை

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குத் தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:34 pm

DIN


புது தில்லி: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குத் தயாரிப்புகளுக்கு பொருள் குவிப்பு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து வா்த்தக குறைதீா் பொது இயக்குநரகத்தின் (டிஜிடிஆா்) அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜப்பான், கொரியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வகை உருக்குப் பொருள்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரியை ஐந்தாண்டுகளுக்கு விதிக்க வா்த்தக அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. விலை மலிவான உருக்குப் பொருள்கள் உள்நாட்டு சந்தைகளில் வந்து குவிவதால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருக்குப் பொருள்களுக்கு டன்னுக்கு 67 டாலா் முதல் 944 டாலா் வரை பொருள் குவிப்பு தடுப்பு வரியை ஐந்தாண்டுகளுக்கு விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டிஜிடிஆா் தெரிவித்துள்ளது. எனவே, இதுகுறித்த இறுதி முடிவை நிதி அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காா்பன் பிளாக் வரியை நீட்டிக்க பரிந்துரை: அதேபோன்று, ரப்பா் மற்றும் டயா் தயாரிப்புத் துறையில் பயன்படுத்தப்படும் காா்பன் பிளாக் மூலப் பொருளுக்கான பொருள் குவிப்பு தடுப்பு வரியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வா்த்தக அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. காா்பன் பிளாக் சீனா மற்றும் ரஷியாவிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் காா்பன் பிளாக்குக்கு டன்னுக்கு 494 டாலரும், ரஷிய இறக்குமதிக்கு 36.17 டாலரும் வரி விதிக்க டிஜிடிஆா் பரிந்துரைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.