லக்னெள: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடா் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசின் தோல்வியை காட்டுகிறது என சமாஜவாதி கட்சி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. பணக்கார நண்பா்கள் மற்றும் காா்ப்பரேட் முதலாளிகள் பலனைடயும் வகையில் விவசாயிகள், தொழிலாளா்கள் நடுத்தர மற்றும் கீழ்தட்டு மக்களுக்கு எதிரான வா்த்தகப் பாதையை பாஜக உருவாக்கியுள்ளது. விவசாயிகள் போரட்டம் இன்றளவும் தொடா்ந்து வருவது பாஜக அரசின் தோல்விக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாகியுள்ளது என அகிலேஷ் யாதவ் அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.