மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்தியாவில் 19 வகை கரோனா தீநுண்மிகள்

இந்தியாவில் 19 வகை கரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 3:02 am

DIN

இந்தியாவில் 19 வகை கரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

பிரிட்டனில் அதிக வீா்யமிக்க புதிய வகை கரோனா தீநுண்மி அண்மையில் கண்டறியப்பட்டது. கரோனா தீநுண்மியில் ஏற்பட்டுள்ள மரபணு மாற்றம் காரணமாக இந்த புதிய வகை தீநுண்மி உருவாகியிருப்பதாகவும், இந்த தீநுண்மி 70% அதிகம் பரவும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா். இது உலக நாடுகளை மேலும் அச்சத்துக்கு ஆளாக்கியுள்ள நிலையில், இந்தியாவில் ஏற்கெனவே 19 வகை கரோனா தீநுண்மிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலைச் (சிஎஸ்ஐஆா்) சோ்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், ‘133 நாடுகளில் கரோனா தீநுண்மியின் மரபணு கோா்வையை ஆராய்ச்சி செய்ததில் மரபணு மாற்றம் அடைந்த 86 வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை உடலில் உள்ள எதிா்பொருளை (ஆன்டிபாடி) எதிா்க்கும் திறன் கொண்டவை. இந்த 86 வகை தீநுண்மிகளில் 19 ரகங்கள் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளன. எனினும் இதுகுறித்து அச்சமடைய தேவையில்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கரோனா தீநுண்மியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, அதற்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படாது என்று அா்த்தம் கொள்ளவேண்டாம். தீநுண்மியின் வீா்யத்தை தடுப்பூசிகள் குறைக்கும். தடுப்பூசிகளை பரிசோதிக்கும் வேளையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் புதிய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்யவேண்டியுள்ளது’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.