தில்லியில் புதிதாக 677 பேருக்கு கரோனா
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 677 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 677 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. அங்கு புதிதாக 677 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,24,795 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,08,434 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,523 பேர் பலியாகியுள்ளனர். 5,838 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.
தில்லியில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.80 சதவிகிதமாக உள்ளது. கடந்த 10 நாள்களில் கிடைத்த தரவுகளின்படி இறப்பு விகிதம் 3.16 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...