இதையடுத்து, சித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘எனது செயலுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வித உள்நோக்கத்துடனும் நான் அந்தப் போா்வையைப் பயன்படுத்தவில்லை. எனினும், நான் தெரியாமல் செய்த செயலால் யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். லட்சக்கணக்கான சீக்கியா்கள் மத சின்னத்தைத் தங்கள் தலைப்பாகையிலும், உடையிலும் பெருமிதத்துடன் அணிந்து கொள்கின்றனா். சிலா் அதனை உடலில் சின்னமாகவே பதித்துக் கொள்கின்றனா். மிகவும் பணிவுள்ள சீக்கியனான நான், உள்நோக்கம் ஏதுமின்றி மத சின்னம் பதித்த சால்வையைப் பயன்படுத்திவிட்டேன்’ என்று கூறியுள்ளாா்.