நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,550 பேருக்கு தொற்று

நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read


நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,550 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மேலும் 20,550 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,02,44,853 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை  98,34,141 போ் கரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனா். 

கரோனாவால் மேலும் 286 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,48,439  ஆக அதிகரித்தது. 

இப்போதைய நிலையில் நாட்டில் 2,62,272 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். தொடா்ந்து 9-ஆவது நாளாக கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 29-ஆம் தேதி வரை 16,09,22,030 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 11,20,281 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com